அண்மைய செய்திகள்

recent
-

புதிய இரண்டு அமைச்சுகளுக்கான வர்த்தமானி வெளியீடு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு புதிய அமைச்சுகள், ஜனாதிபதியினால் வர்த்த மானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, இலங்கையில் அமைச்சரவை அமைச்சர் களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், மேலும் சில அமைச்சுகளின் விடயதானங் களிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

 புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணி செயற்படவுள்ளது. இதுவரையில், ஜனாதிபதி செயலகத்தின் கீழிருந்து இலங் கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள், சிறி லங்கா ரெலிகொம் மற்றும் அதன் நிர்வாக நிறுவனங்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன.

 இதேவேளை, இதுவரையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கீழிருந்த காவல்துறை திணைக்களம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்த சிவில் பாது காப்பு திணைக்களம் என்பன புதிய வர்த்தமானி அறி வித்தலின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைச் சான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன

.
புதிய இரண்டு அமைச்சுகளுக்கான வர்த்தமானி வெளியீடு Reviewed by Author on November 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.