அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்! – தமிழ் ஆசிரியர் சங்கம்

நாளை பாடசாலைகள் ஆரம்பமாக உள்ள நிலையில் நாட்டில் இதுவரை உருவாகியுள்ள இரண்டு கொத்தணிகளுக்கு மேலதிகமாக பாடசாலை கொத்தணி என ஒன்று உருவாவதற்கு வழியேற்படுத்த வேண்டாமென கல்வி அமைச்சரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், “நாளை தரம் 6 முதல் உயர்தரம் வரை பாடசாலைகள் ஆரம்பமாகும் என அறிவித்துள்ளீர்கள். இன்றுவரை மரணங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. தொற்றாளர் எண்ணிக்கை உயர்ந்தே செல்லுகின்றது. ஆடைத் தொழிற்சாலை கொத்தணியும், பேலியகொடை கொத்தணியும் நாடு முழுவதும் பரவியுள்ளது. க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பிக்கும் போதே ஆடைத்தொழிற்சாலை நோயாளர்கள் கண்டறியப்பட்டனர்.

அதன் காரணமாகவே பரீட்சையை இரு வாரங்களுக்காவது ஒத்திவைத்து தொற்றைக் கட்டுப்படுத்திய பின்னர் பரீட்சையை
நடாத்துங்கள் என கேட்டோம். பரீட்சை தொடர்ந்தது. தொற்றோடு மாணவர்களும் பரீட்சை எழுதினர். அதனை இயல்பு நிலையென கருதிய மக்கள் சாதாரணமாக நடந்து கொண்டனர். அதன் விளைவே இன்றைய மோசமான நிலைக்கும் காரணம். நாட்டில் உருவாகியுள்ள இரண்டு கொத்தணிகளுக்கு மேலதிகமாக பாடசாலை கொத்தணி என ஒன்று உருவாவதற்கு வழியேற்படுத்த வேண்டாம். என கேட்டுக் கொள்கின்றோம். 

 அத்தோடு சில அறிவுறுத்தல்கள் இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது, 1.ஆரம்ப பிரிவுகள்(1-5) இணைந்துள்ள இடைநிலை, மேல்நிலைப் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பாடசாலை செல்ல வேண்டுமா?

2.வெவ்வேறு மாவட்டங்களில் கடமையாற்றும், வேறு மாகாணங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வாழுகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலைகள் இயங்கும் பிரதேசங்களுக்கு எவ்வாறு செல்வது அவர்களின் கடமை ஒழுங்கு என்ன? போன்ற விடயங்களில் தெளிவான அறிவித்தல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.
பாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்! – தமிழ் ஆசிரியர் சங்கம் Reviewed by Author on November 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.