மரத்தில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு
சம்பவம் இடம்பெற்ற நேற்று (21) நண்பகல் வேளை, குறித்த சிறுவன் மதிய உணவு உட்கொண்ட பின்னர் விளையாடுவதற்காக வெளியே வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது சிறுவனின் தாய் தனது இரண்டாவது மகனுக்கு மதிய நேர உணவைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது தனது மூத்த மகன் வீட்டு வளவுக்குள் உள்ள கொய்யா மரத்தில் விளையாட்டுக்காக கட்டப்பட்டிருந்த (intravenous infusion set) செய்லன் பட்டையில் கழுத்து இறுகி தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த தாயின் அழுகுரலைக் கேட்ட, தாயின் தந்தை உட்பட அயலவர்கள் அங்கு வருகை தந்து, மரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்ட குறித்த சிறுவனை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே குறித்த சிறுவன் உயிரிழ்ந்துள்ளான்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், குறித்த மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்ட சடலம் இன்று (22) பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
குறித்த சிறுவனின் கழுத்து இறுகியமையால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து சடலத்தை பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மேலும் தெரிவித்தார்.
மரத்தில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
November 22, 2020
Rating:
Reviewed by Author
on
November 22, 2020
Rating:


No comments:
Post a Comment