அண்மைய செய்திகள்

recent
-

இயல்பு வாழ்வையும், பொருளாதாரத்தையும் பாதிக்காது கொவிட் பரவலை கட்டுப்படுத்த புதிய தீர்மானங்கள்:

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் பொருளாதாரத்திற்கு பாதிப்பில்லாத வகையிலும் கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வழிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. 

தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு ஆட்களைக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் நல்ல விளைவை தந்துள்ளது. இந்த நடைமுறையைத் தொடர்ந்தும் முறைப்படுத்துவதற்காக - சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், காவற்துறை மற்றும் முப்படைகள் ஆகிய தரப்புகளின் தொடர்ச்சியான கண்காணிப்புக்கு இந்த நபர்கள் உட்படுத்தப்பட வேண்டும் என்பதை ஜனாதி சுட்டிக்காட்டியுள்ளார்.

. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு PCR பரிசோதனை 10வது நாளில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் முடிவுகளுக்கு ஏற்ப தொற்றுக்கு உள்ளாகாதவர்களைப் 14 நாட்களுக்கு பின்னர் சாதாரண பொது வாழ்க்கைக்கு அனுமதிக்குமாறும் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுடன் நேற்று ஜனாதிபதி செலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவற்றை ஜனாதிபதி   தெரிவித்தார்.

 மேலும் - “கொவிட் 19 தொடர்பில் அனுபவமில்லாத முன்னைய சந்தர்ப்பத்தின் போது கூட மிகவும் சிறப்பாக மக்களைப் பாதுகாக்க அரசாங்கத்திற்கு இயலுமாக இருந்தது. அதன்போது மேற்கொள்ளப்பட்ட முறைமைகளைப் பயன்படுத்தி தற்போதைய நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தொடர்ச்சியாக எழுமாறான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியமானது. அவற்றின் முடிவுகளைக் குறுகிய காலத்தில் வழங்குவதற்கு முடியுமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். தனியார் வைத்தியசாலைகளிலோ அல்லது அரசின் ஊடாகவோ - எந்த வகையில் பரிசோதனைகள் செய்யப்படும் போதும், குறித்த நபர்கள் தொடர்பான பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்களைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவது கட்டாயமானது.

 அத்தோடு - தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகள் சுகாதார அமைச்சின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட உடனேயே - அவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் வாழும் பிரதேசம் என்பன முடக்கப்படுவது நோய்த்தொற்றுப் பரவுவதைத் தவிர்ப்பதற்கான உடனடி நடவடிக்கையாகும்” என்பவற்றை ஜனாதிபதி வலியுறுத்தினார். அதற்கு மேலதிகமாக - ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்துவதன் மூலமும் நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க எதிர்பார்க்கப்படுகிறது. 

 எனவே - ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள பிரதேசங்களில் அதனைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் காவற்துறையினருக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன். பொருட்களை விநியோகித்தல் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த - மாவட்டங்களுக்கு இடையிலான ஏனைய பயணங்களை இடைநிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில், இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டவாறு, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிப்படுவதனைப் பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும், கிராம சேவகர்ர்களுக்கும், மற்றும் உள்ளுராட்சி பிரதிநிதிகளுக்கும் பொறுப்புகளைப் பகிர்ந்தளித்து வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன், மாதாந்த முதியோர் கொடுப்பனவுகள், முன்பு போன்று, வீடு வீடாக வழங்கப்படுவதனை பசில் ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார்.

 வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான பொருட்கள் பொதி ஒன்றினை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் நடைமுறையில் உள்ள ஊடரடங்குச் சட்டத்தைத் தொடர்ச்சியாக நவம்பர் 09ஆம் திகதி திங்கள் காலை 5.00 மணி வரை நீடிக்கவும் நேற்று தீர்மானிக்கப்பட்டது. இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட காவற்துறைப் பிரிவு, குருணாகல் நகர சபை எல்லை மற்றும் குளியாபிட்டிய காவற்துறை பிரிவுக்கும் எதிர்வரும் 09ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 இந்த காலப்பகுதியில், முன்னர் போன்று, ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரங்களை வழங்க வேண்டாம் என்றும் நான் காவற்துறையினருக்குப் பணிப்புரை வழங்கியுள்ளேன். அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, அமைச்சர் மருத்துவர் ரமேஷ் பதிரண, இராஜாங்க அமைச்சர்களான மருத்துவர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, மருத்துவர் சீதா அரம்பேபொல, பேராசிரியர் சன்ன ஜயசுமன, எனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் ஏனைய உறுப்பினர்களும் நேற்றைய கலந்துரையாடலில் பங்குபற்றினர்.







இயல்பு வாழ்வையும், பொருளாதாரத்தையும் பாதிக்காது கொவிட் பரவலை கட்டுப்படுத்த புதிய தீர்மானங்கள்: Reviewed by Author on November 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.