வவுனியா மாவட்டத்தில் 347 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தல்
வவுனியா மாவட்டத்தில் கொவிட் 19 தாக்கம் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் தெரிவித்ததாவது,
வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அவர்களுடன் வேலை செய்த மற்றும் தொடர்புகளை பேணியவர்கள், பிற மாவட்டங்களில் உள்ள கொரோனா தொற்றாளர்கள் சென்று வந்த இடங்களுக்கு சென்று வந்தோர் என 347 குடும்பங்களைச் சேர்ந்த 863 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், வவுனியா வடக்கில் 182 குடும்பங்களைச் சேர்ந்த 470 பேரும், செட்டிகுளம் பகுதியில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேரும், வவுனியாவில் 153 குடும்பங்களைச் சேர்ந்த 355 பேரும் இவ்வாறு சுய தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் 347 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தல்
Reviewed by Author
on
November 02, 2020
Rating:

No comments:
Post a Comment