அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வங்காலையில் 'குணவர்த்தன' வீதி அபிவிருத்திக்கு பதிலாக வேறு வீதியை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை கிராமத்தில் கடந்த வருடம் பல மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தார் வீதியானது இந்த வருடம் ஐ ரோட் வேளைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு காபட் வீதியாக புனரமைப்பு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, உண்மையாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதி புறக்கணிப்புச் செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மன்னார் வங்காலை கிராமத்தில் ஐ ரோட் வேளைத்திட்டத்தின் மூலம் காபட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கு உள்வாங்கப்பட்டுள்ளது.

 குணவர்த்தன வீதி ஒன்று மற்றும் இரண்டு ஆகிய வீதிகள் எற்கனவே தார் வீதியாக ஒன்றும் கொங்ரீட் வீதியாக ஒன்று அபிவிருத்தி செய்யப்பட்டு நல்ல நிலையில் உள்ளது. ஆனால் ஆவணப்பதிவுகளின் படி உண்மையான 'குணவர்த்தன' வீதி குண்றும் குழியுமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதியாகவும் உள்ள குணவர்த்தன வீதி அபிவிருத்தி செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றார்கள். -இவ்விடையம் தொடர்பாக அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,,,,, வங்காலை 4ஆம் வட்டாரம் ஊடாக செல்லுகின்ற 'குணவர்த்தன' வீதி இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று குறித்த வீதிக்கு முதல் பக்கத்தில் உள்ளது முதலாம் குறுக்குத் தெரு என்றும் மறு பக்கத்தில் உள்ளது இரண்டாம் குறுக்குத் தெரு என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் பிரதான வீதி ஒன்று ஊடறுத்து செல்வதால் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.

 இந்த இரண்டு வீதிகளையும் ஐ புரஜக்ட் வேளைத் திட்டத்தில் புனரமைப்பு செய்வதற்கு உள்வாங்கப்பட்டுள்ளது. ஆனால் குணவர்த்தன வீதி ஒன்றை புனரமைப்பு செய்வதற்கும் பதில் குறுக்கு வீதி ஒன்றை புனரமைப்பு செய்வதற்கு சில அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வர்த்தமானி அறிவித்தலின் படி உள்ள குணவர்த்தன வீதி புனரமைப்பிற்கு உள்வாங்கப்பட வில்லை. ஆதாரம் அனைத்தும் எம்மிடம் உள்ளது. இது தொடர்பாக பல அதிகாரிகளுக்கு நாங்கள் கடிதம் அனுப்பியும் இன்று வரை எமக்கு சாதகமான பதில் எதுவும் கிட்டவில்லை. கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு மேலாக இந்த வீதி அபிவிருத்தி செய்யக்கடவில்லை. 

 இந்த வீதியால் நூற்று கணக்கான மாணவர்கள் பாடசாலை செல்கிறார்கள். மருத்துவமனை மற்றும் ஆலயத்திற்கும் இந்த வீதி வழியாகவே செல்கிறார்கள். இந்த நிலையில் யாரும் கவனிப்பார் அற்று கிடப்பதுடன் இந்த பெயரை பயன்படுத்தி வேறு வீதிகளை அபிவிருத்தி செய்கிறார்கள். தற்போது புனரமைப்பு செய்யப்பட உள்ள வீதி 2019ஆம் ஆண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பல மில்லியன் ரூபாய் செலவில் தார் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்டு நல்ல நிலையில் உள்ளது.

 அதற்கு செலவிடும் நிதியை அபிவிருத்தி செய்ய வேண்டிய புதிய வீதிக்கு பயன்படுத்துவதே சிறந்தது. உரிய அதிகாரிகள் சரியான முடிவை எடுத்து 'குணவர்த்தன' வீதி ஒன்றும் இரண்டும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அதுவும் வர்த்தமானி அறிவித்தலில் உள்ளதும் கிராம மக்களினால் அடையாளப் படுத்தப்பட்டதுமான குணவர்த்தன வீதியை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
                







மன்னார் வங்காலையில் 'குணவர்த்தன' வீதி அபிவிருத்திக்கு பதிலாக வேறு வீதியை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை Reviewed by Author on November 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.