மன்னாரில் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பில் முதற்கட்ட தலைமைத்துவ பயிற்சிகள் இடம் பெற்றது.
குறித்த பயிற்சி ஊடாக உங்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக மாற்றிக் கொண்டு கடமையாற்ற வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.
ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பிற்கு என மன்னார் மாவட்டத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 42 இளைஞர்,யுவதிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி கடந்த இரண்டு வாரங்கள் மன்னார் இளைஞர் படையணி முகாமில் இடம் பெற்றது.
குறித்த பயிற்சியின் இறுதி நிகழ்வு இன்று (28) சனிக்கிழமை காலை மன்னார் இளைஞர் படையணி முகாமில் இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,.
ஜனாதிபதி அவர்களின் உயர்ந்த சிந்தனைக்கு அமைவாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இளைய சமூகத்தினர் திசை மாறிச் சென்று விடக்கூடாது என்பதற்காக சரியான திசையை அவர்களுக்கு வழி காட்ட வேண்டும் என்ற நோக்கில் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பிற்கு என இளைஞர்,யுவதிகளை தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மூலம் இந்த நாட்டினுடைய அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு, இவ்வாறான ஒரு செயலனி அமைக்கப்பட்டு நாடு முழுவதிலும் இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்பட்டு எங்களுடைய மாவட்டத்தில் 1834 பேர் தெரிவு செய்யப்பட்டு முதல் கட்டமாக 42 பேர்கள் குறித்த இரண்டு வார தலைமைத்துவ பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.
-இந்த பயிற்சி நெறியில் பல்வேறு பாடங்களை கற்றுக் கொண்டிருப்பீர்கள். எவ்வித பிரச்சினைகளும் இன்றி சகிப்புத்தன்மையை ஏற்றுக்கொள்டு குறித்த பயிற்சி நெறியை பூர்த்தி செய்துள்ளீர்கள்.
-அனைவருடைய திறமைகளையும் வெளிக் கொண்டு வருவதற்கு இங்கு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் சமூகத்திலும், திணைக்களத்திலும், குடும்பங்களிலும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு பயிற்சிகள் கடந்த இரண்டு வாரங்கள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
-பெற்றுக் கொண்ட பயிற்சியை நீங்கள் தொடர்ந்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
-ஆறு மாத பயிற்சியில் தற்போது இரண்டு வார பயிற்சி மட்டுமே உங்களுக்கு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து மிகுதி பயிற்சியை தேசிய பயிலுனர் அதிகாரசபை ஊடாகவும், ஏனைய திணைக்களங்கள் ஊடாகவும் பயிற்சியை பெற்றுக்கொள்ள உள்ளீர்கள்.
இந்த பயிற்சியை பெற்றுக் கொள்ளுவதன் மூலம் ஒவ்வொரு விதமான துறைகளிலும் நீங்கள் கடமையாற்ற செல்வீர்கள்.
எனவே உங்களின் துறைகளில் இருந்து நீங்கள் முன்னேற முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வை தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாமில் இளைஞர்,யுவதிகள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பில் முதற்கட்ட தலைமைத்துவ பயிற்சிகள் இடம் பெற்றது.
Reviewed by Author
on
November 28, 2020
Rating:

No comments:
Post a Comment