யாழ்ப்பாணத்தில் மாவீரர்களை நினைவேந்த முற்பட்ட அருட்தந்தை கைது-பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கண்டனம்
தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த மாவீரர்கள் மற்றும் உறவினர்களுக்கு அஞ்சலி செழுத்த முற்பட்ட அருட்தந்தை அவர்கள் கைது செய்தமைக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
-தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் மண்ணுக்காகவும் உயிர் நீத்த மாவீரர்களை வருடா வருடம் நினைவு கூறுவது தமிழ் மக்களின் கடைமையும், உரிமையுமாக உள்ளது.
-கடந்த காலங்களில் இல்லாத தடைகளும்,அடக்கு முறைகளும் தற்போது ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் பல்வேறு அடக்கு முறைகளுக்கு மத்தியில் தமது உறவுகளுக்கு அஞ்சலியை செலுத்தி உள்ளனர்.
-அதன் ஒரு நிலைப்பாடாகவே யாழ்ப்பாணத்தில் ஆயர் இல்லத்திற்கு அருகில் உள்ள குருமடத்தினுள் அருட் தந்தை எஸ். பாஸ்கரன் அவர்கள் அஞ்சலி செலுத்த முற்பட்ட போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கையினை வண்மையாக கண்டிக்கின்றேன்.
-நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக மக்கள் செயற்பட்டுள்ளனர்.
பொது இடங்களில் ஒள்று கூடாமல் தமது வீடுகளிலும்,பிரத்தியேக இங்களிலும் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
எனவே மாவழுரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட அருட்தந்தை அவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை தொர்பில் தமிழ் தேசியக்கூட்டடைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் வண்மையாக கண்டிப்பதோடு,அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் மாவீரர்களை நினைவேந்த முற்பட்ட அருட்தந்தை கைது-பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கண்டனம்
Reviewed by Author
on
November 28, 2020
Rating:

No comments:
Post a Comment