அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டம் தற்போது வரை கொரோனா தொற்று நோய் முழுமையாக இல்லாத ஒரு மாவட்டமாக உள்ளது-அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல்

மன்னார் மாவட்டத்தில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கு உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வதற்காக மன்னாரில் இருந்து மேல் மாகாணம் மற்றும் ஏனைய மாகாணங்களுக்கு செல்லுகின்ற வாகனங்கள் முருங்கன் சுற்றிகரிப்பு நிலையத்தில் நிறுத்தப்பட்டு, வாகனங்களுக்கான சுற்றிகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார். 

 மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பான தற்போதைய நிலமை தொடர்பாக ஆராயும் அவசர கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(24) மாலை 3 மணியளவில் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. குறித்த கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேசச் செயலாளர்கள்,இராணுவ,பொலிஸ் உயரதிகாரிகள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாள், சுகாதார வைத்திய அதிகாரிகள் உற்பட அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர். இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் அவ்வாறு தெரிவித்தார். 

 அவர் மேலும் தெரிவிக்கையில்,,, தற்போது மன்னார் மாவட்டம் கொரோனா தொற்று நோய் முழுமையாக இல்லாத ஒரு மாவட்டமாக உள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெறிவித்துக் கொள்ளுகின்றேன். சகல துறையினரும் இதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி உள்ளனர். தொடர்ந்தும் இந்த நிலையை பேனுவதற்கான அனைவரும் முழு முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும் என குறித்த கூட்டத்தில் தீர்மானித்துள்ளோம். மன்னார் மாவட்டத்தில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கு உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வதற்காக மன்னாரில் இருந்து மேல் மாகாணம் மற்றும் ஏனைய மாகாணங்களுக்கு செல்லுகின்ற வாகனங்கள் முருங்கன் சுற்றிகரிப்பு நிலையத்தில் நிறுத்தப்பட்டு, வாகனங்களுக்கான சுற்றிகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 வெளி மாவட்டங்களில் இருந்து மன்னாரிற்கு வருவதாக இருந்தாலும், இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதாக இருந்தாலும் வாகனங்கள் சுற்றிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் கிராமங்கள், பிரதேசங்கள், என மாவட்ட ரீதியாக குழுக்கள் அமைக்கப்பட்டு, இதற்கான விழிர்ப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் மாவட்டத்தின் டெங்கு நிலவரம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

 தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. அந்த நிலையினை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அலோசனைகளை முன்னெடுத்துள்ளோம். மேலும் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பாக சுய தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு என 6 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வரை நிவாரணமாக வழங்கி உள்ளோம்.

 தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கான கொடுப்பணவையும் வழங்க தயார் நிலையில் இருக்கின்றோம். என அவர் மேலும் தெரிவித்தார்.






மன்னார் மாவட்டம் தற்போது வரை கொரோனா தொற்று நோய் முழுமையாக இல்லாத ஒரு மாவட்டமாக உள்ளது-அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் Reviewed by Author on November 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.