மன்னார் பிரதேச சபை வரவு செலவு திட்டம் வெற்றி
குறித்த வாக்கெடுப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் , தமிழர்விடுதலை கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சிகளை சேர்ந்த 10 உறுப்பினர்கள் இணைந்து வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கியதேசிய கட்சியை சேர்ந்த 09 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்த்துக்கு எதிராகவும் வாக்களித்திருந்தனர்
ஒருவருர் நடுநிலைமைவகித்தார்
அதனை தொடர்ந்து ஒரு மேலதிக வாக்கினால் வரவு செலவு திட்டமானது வெற்றி பெற்றது.
அதே நேரத்தில்
ரெலோ கட்சியின் தவிசாளர் உள்ள மன்னார் நகர சபையின் 2021 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் வெற்றி பெறுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடந்த மாதம் மன்னார் நகர சபை அமர்வில் ஆதரவு வழங்கியிருந்த நிலையில் அதற்கு நன்றி காட்டும் விதமாக மன்னார் பிரதேச சபை வரவு செலவு திட்டத்திற்கு ரெலொ உறுப்பினரான மோகன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அதரவு வழங்கினால் தமிழ் மக்களின் எதிர்பு கிளம்பும் என்பதால் வரவு செலவு திட்ட அமர்வில் புத்திசாலித்தனமாக கலந்து கொள்ளவில்லை இதன் காரணமாக ஒருவாக்கு இல்லாமையால் வரவு செலவுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
மன்னார் பிரதேச சபை வரவு செலவு திட்டம் வெற்றி
Reviewed by Author
on
December 17, 2020
Rating:

No comments:
Post a Comment