சாரதிகளின் கவனத்திற்கு..! பண்டிகை காலத்தில் விசேட சோதனை நடவடிக்கை!
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வாகன சோதனையில் சுமார் 9 ஆயிரம் பொலிசார் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ச்சியாக எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இது செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்களிடம் தண்டப்பணம் அறவிடுதல், கைது செய்தல் எமது எதிர்பார்ப்பு அல்ல. பொதுமக்களின் பாதுகாப்பை கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
வீதி விபத்துக்களை குறைத்தல், மதுபோதையில் வாகனங்கள் செலுத்தும் நபர்களை கைது செய்தல், வீதி பாதுகாப்பினை உறுதி செய்தல், அதேபோல் அதிகவேக வேகத்தில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்தல், குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்தல் அல்லது முழுமையாக ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றிடம் கோரிக்கை விடுவதாக அவர் தெரிவித்தார்.
சாரதிகளின் கவனத்திற்கு..! பண்டிகை காலத்தில் விசேட சோதனை நடவடிக்கை!
Reviewed by Author
on
December 22, 2020
Rating:

No comments:
Post a Comment