அண்மைய செய்திகள்

recent
-

சடலங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு குளிர்சாதன வசதிகளுடன் கொள்கலன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன..!

கொவிட்-19 தொற்று காரணமாக மரணிப்பதாக சந்தேகிக்கும் முஸ்லிம்களின் சரீரங்களை தகனம் செய்வது தொடர்பில் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் பாதுகாப்பாக வைப்பதற்காக குளிர்சாதன வசதிகள் அடங்கிய 5 கொள்கலன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 

 முஸ்லிம்களின் தனிப்பட்ட நன்கொடையாக இந்த கொள்கலன்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய குறித்த குளிர் கொள்கலன்களில் 5 சரீரங்கள் வைக்கப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு நீதியமைச்சிடம் கோரியிருந்தார். இந்த பின்னணியில் காலி - தெத்துகொட பகுதியில் கொரோனா காரணமாக மரணித்தவரின் சடலத்தை அடக்கம் செய்யாமல் குளிர் அறையில் வைப்பதற்கு காலி நீதவான் பவித்ரா சஞ்ஜீவனி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

சடலங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு குளிர்சாதன வசதிகளுடன் கொள்கலன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன..! Reviewed by Author on December 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.