அண்மைய செய்திகள்

recent
-

லொறியும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து - இருவர் பரிதாபமாக பலி!

திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதியின் ஜயபுர பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (7) இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 சம்பவத்தில் திவுலபிடிய படேபொல பகுதியைச் சேர்ந்த கே.நதீக சம்பத்குமார (38 வயது) மற்றும் புத்தளம் - முந்தலம பகுதியைச் சேர்ந்த விஜயசிங்க ஆராய்ச்சிலாகே இஷான் சமிந்த (35 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை லொறியின் சாரதியான ஊறுவத்த கதன்ஹேனவத்த பகுதியைச் சேர்ந்த பத்தினிகே பியனந்த (58 வயது) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (8) கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 உயிரிழந்தவர்களின் சடலங்கள் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லொறியும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து - இருவர் பரிதாபமாக பலி! Reviewed by Author on December 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.