ஹெரோயின் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது
பொலிசாரால் அனுப்பப்பட்ட நபர் போதைப்பொருளை கொள்வனவு செய்ததுடன்,விற்பனை செய்த நபரை பொலிசாரிடம் அடையாளப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் பொலிசார் குறித்த நபரை கைது செய்ய முனைந்துள்ளனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்ப்பட்டிருந்தது.
ஹெரோயின் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தான் ஐயப்பன் விரதம் அனுஸ்டித்து வருவதாகவும், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடவில்லை என்றும் தன்னை கைதுசெய்ய வேண்டாம் என்றும் பொலிசாரிடம் கெஞ்சியுள்ளார்.
இதனால் குறித்த பகுதியில் பொது மக்கள் ஒன்று கூடியதுடன், குழப்பமான நிலையும் ஏற்ப்பட்டிருந்தது. பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
இதேவேளை கைது செய்யப்பட்ட நபரிடம் மேலும் போதைப்பொருள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வவுனியா சதோசவிற்கு பின்பான பகுதியில் பொலிசாரால் தேடுதல் நடாத்தப்பட்டு வருகின்றது.
ஹெரோயின் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது
Reviewed by Author
on
December 17, 2020
Rating:

No comments:
Post a Comment