குளத்துக்குள் பாய்ந்த கெப் வாகனம்! 2 குழந்தைகள் உட்பட மூவர் பலி!
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார், கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து வாகனத்தை குளத்தில் இருந்து மீட்டு எடுத்த போது வாகனத்தில் இருந்து சிறுவன் ஒருவன் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, வாகனத்தின் உடைய சாரதியான 37 அகவையுடைய கிருஸ்ணபிள்ளை ரசீந்திரன், அவரது மூன்று வயது மகளாக ரசீந்திரன் சார்ஜனா ஆகியோரை தேடும் நடவடிக்கையில் பொலீசார், படையினர், பொதுமக்கள் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
விபத்தின் போது நீரில் மூழ்கிய ரவீந்திரகுமார் சஞ்சீவன் என்ற 13 அகவையுடைய சிறுவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குளத்தினை பார்வையிட சென்ற சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் தெரியவந்துள்ளது
.
.
குளத்துக்குள் பாய்ந்த கெப் வாகனம்! 2 குழந்தைகள் உட்பட மூவர் பலி!
Reviewed by Author
on
December 20, 2020
Rating:

No comments:
Post a Comment