மன்னாரில் மண் அகழ்வில் ஈடுபட அனுமதி இல்லை-சுற்றுச் சூழல் அமைப்பின் கலந்துரையாடலில் தீர்மானம்
குறித்த கூட்டத்திலே மன்னார் மாவட்ட எல்லை பகுதிக்குள் அரச அனுமதியுடனோ அரச அனுமதி இன்றியோ சட்ட ரீதியாகவோ சட்ட முரணாகவோ மண் அகழ்வு மேற்கொள்ள அனுமதிக்க போவதில்லை என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் வளங்கள் பயன்பாடு தொடர்பாக நாடளாவிய ரீதியில் காணப்படும் சட்டங்கள் தொடர்பாகவும் அவற்றை பாதுகாப்பதற்காக நீதி மன்றங்களை பயன்படுத்துவதற்கு ஏதுவான காரணங்கள் தொடர்பாகவும் சுற்றாடல் நீதிக்கான அமைப்பின் விரைவுரையாளர்களால் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே மேற்படி தீர்மானிக்கப்பட்டது.
அதே நேரத்தில் மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடங்களில் அவுஸ்ரேலிய நிறுவனத்தினால் இடம் பெற்றுள்ள கனியவள ஆய்வு செயற்பாடு தொடர்பாகவும் அவற்றை கையாளுவதற்கான அனுகு முறைகள் தொடர்பாக கணிய அகழ்வை தடுப்பதற்கான பல்வேறு தெளிவுபடுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் சமூக ஆர்வளர்கள் சூழலியளாலர்கள் பிரஜைகள் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டணர்
குறித்த கனியவள ஆய்வு மற்றும் அகழ்வுக்கு எதிராக நேற்றையதினம் எதிர்ப்பு போராட்டம் இடம் பெற்றமை குறிப்பிடதக்கது.
மன்னாரில் மண் அகழ்வில் ஈடுபட அனுமதி இல்லை-சுற்றுச் சூழல் அமைப்பின் கலந்துரையாடலில் தீர்மானம்
Reviewed by Author
on
December 30, 2020
Rating:

No comments:
Post a Comment