அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் நிவேதனம் மற்றும் எங்கள் இயற்கை பூமி அமைப்பின் ஊடாக விழிப்புணர்வு செயற்திட்டம்

மரங்களை பாதுகாப்பதன் ஊடாக நாட்டை வளப்படுத்துவோம் எனும் தொணிப்பொருளில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்திட்டம் இன்று காலை 11 மணியளவில் ச்நிவேதனம் உளவளத்துனை சேவைகள் நிலையம் மற்றும் எங்கள் இயற்கை பூமி அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் பேரூந்து நிலைய முன் பகுதியில் இடம் பெற்றது.

  வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபடும் மக்கள் சூழலை பாதுகாப்பதில் அக்கறை கொள்வதுடன் மரங்களையும் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த சூழலை வழங்க வேண்டும் என்ற நோக்கிற்கு அமைவாக குறித்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

 குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.சிவபாலன் குணபாலன் மன்னார் நகரசபை செயலாளர் திரு.பிறிட்டோ மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் நிவேதனம் அமைப்பின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு மர நடுகையின் அவசியம் தொடர்பாகவும் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டில் கலந்து கொண்டனர்.











மன்னாரில் நிவேதனம் மற்றும் எங்கள் இயற்கை பூமி அமைப்பின் ஊடாக விழிப்புணர்வு செயற்திட்டம் Reviewed by Author on December 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.