கிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வங்கால விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு அருகிலும் தென் கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாகவும் காணப்படுகின்ற தாளமுக்கமானது கடந்த 6 மணித்தியாலயங்களில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தென் மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.
இது தற்போது திருகோணமலையில் இருந்து கிழக்கு தென்கிழக்காக 530 கிலோமீட்டர் தூரத்திலும் கன்னியாகுமரியில் இருந்து கிழக்கு தென் கிழக்காக 930 கிலோமீட்டர் தூரத்திலும் காணப்படுகின்றது.
இது அடுத்துவரும் வரும் 24 மணித்தியாலத்தில் சூறாவளியாக வலுவடைந்து திருகோணமலை பிரதேசத்திற்கு நாளை 2ம் திகதி மலை அல்லது இரவு வேளையில் ஊடாக ஊடறுக்கும் என என எதிர்பார்க்கப்படுகின்றது.
இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு வடக்கு வடமத்திய ஊவா மாகாணங்களில் அம்பாந்தோட்டை மாத்தறை மாவட்டத்தில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இத் தாக்கத்தினால் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே இத்தருனத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் மீனவர்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களிலுள்ள மக்கள் அவதானமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
.
.
கிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Reviewed by Author
on
December 01, 2020
Rating:
Reviewed by Author
on
December 01, 2020
Rating:


No comments:
Post a Comment