அண்மைய செய்திகள்

recent
-

இடம் பெயர்ந்த மக்களின் வாக்குரிமை மீறல் தொடர்பாக மன்னார் பிரதேச சபையின் தலைவர் மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த மக்களின் வாக்குரிமை மீறல் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் மாவட்ட பிராந்திய அலுவலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(21) காலை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தெரிவித்தார். 

 அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,, நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக 1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மன்னாரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் கல்வி,தொழில்,வதிவிடம்,போன்ற தேவைகளின் நிமித்தம் தற்போதும் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வருகின்றார்கள்.

 இருப்பினும் இவர்களது அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் சொந்த இடமான மன்னார் மாவட்டத்தில் மீளக் குடியேற தயாராக உள்ளனர். 1981 ஆம் ஆண்டு 44 ஆம் இலக்க தேருனர்கள் பதிவுச் சட்டத்தில் 12(7) ஆம் உப பிரிவிற்கிணங்க குறித்த ஒரு வாக்காளர் ஒன்றிற்கு மேற்பட்ட சாதாரண வதிவிடங்களைக் கொண்டிருக்கின்ற விடத்து அவரது வாக்கினை பதிவு செய்வதற்கான தகைமை வாய்ந்த முகவரி எது என தீர்மானிக்கும் உரிமை குறித்த வாக்காளருக்கே உரியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  அவ்வாறு இரு இடங்களிலும் ஒருவர் விண்ணப்பித்திருந்தால் எந்த இடத்தை தெரிவு செய்யப் போகிறீர்கள் என்று வாக்காளரிடம் கேட்டு ஒரு முகவரியை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் குறித்த தேருநர் பதிவு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிராம அலுவலகர்,மன்னார் பிரதேசச் செயலாளர் மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோரினால் இவ்வாறு இடம் பெயர்ந்த மக்களின் வாக்களிக்கும் உரிமையானது நிரந்தர வதிவிட மாவட்டமான மன்னார் மாவட்டத்திலும் இடம் பெயர்ந்து வாழும் மாவட்டங்களிலும் இல்லாமல் மறுக்கப்பட்ட நிலையில், அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற ரீதியில் பாதீக்கப்பட்டவர்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள்.

 இவ்விடையம் அவர்களின் வாக்களிக்கும் உரிமையினை பாதீக்கும் ஒரு ஜனநாயக விரோத செயற்பாடாக அமைவதுடன் மனித உரிமை மீறலாகவும் அமைந்துள்ளது. எனவே இவ்வாறு வலுக்கட்டாயமாக அவர்களின் விருப்பத்திற்கு முரணாக தமது வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தாம் பூர்வீகமாக வாழ்ந்த மாவட்டத்தில் தமது வாக்களிக்கும் உரிமையினை பெற்றுக்கொள்ளுவதற்கு அவர்களின் நிரந்தர வதிவிட மாவட்டமான மன்னார் மாவட்டத்தின் வாக்காளர் பட்டியலுடன் சேர்த்துக் கொள்ளுவதற்கு ஏதுவாக அரசுடனும்,தேர்தல்கள் ஆணையாளருடனும் கதைத்து பாதீக்கப்பட்ட மக்களின் வாக்களிக்கும் உரிமையை மீட்டுத்தருவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்தேன்.என மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் மேலும் தெரிவித்தார்.
               



இடம் பெயர்ந்த மக்களின் வாக்குரிமை மீறல் தொடர்பாக மன்னார் பிரதேச சபையின் தலைவர் மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு. Reviewed by Author on January 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.