மரத்தின் கிளையொன்று குத்தியதால் ஒருவர் பலி
மண் ஏற்றும் கென்டர் வாகனத்தினை தும்பங்கேணி பிரதான வீதியூடாக ஓட்டுச்சென்று சிறிய வீதியொன்றின் ஊடாக செலுத்தமுற்பட்டபோது மரமொன்றின் கிளை வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு சாரதியின் நெஞ்சுப்பகுதியை தாக்கியுள்ளது.
இதன்போது வாகனத்தின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் இதன்போது வாகனத்தில் சென்ற உதவியாளர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டதுடன் மரண விசாரணையினை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்கான உத்தரவினை பிறப்பித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மரத்தின் கிளையொன்று குத்தியதால் ஒருவர் பலி
Reviewed by Author
on
January 26, 2021
Rating:
Reviewed by Author
on
January 26, 2021
Rating:


No comments:
Post a Comment