தோட்ட தொழிலாளர்களுக்கான வீட்டுத் திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானம்
வௌ்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் ஆபத்துகள் இருப்பின் லயன் அறைகள் அமைந்திருக்கும் இடங்களில் இட வசதிகள் போதுமானளவு இல்லாவிட்டால் வேறு இடங்களில் வீடமைப்பை நிர்மாணிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பிற்காலத்தில் குறித்த வீடுகளை இருமாடி வீடுகளாக நிர்மாணிக்கக்கூடிய வகையில் 550 சதுர அடிகளை கொண்ட வீட்டின் முதலாம் கட்டத்தை 1.3 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்பு மற்றும் வீட்டுத் தோட்டத்திற்காக மேலதிகமாக 03 பேச்சர்ஸ் காணியை ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் ஒதுக்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வீடமைப்பின் பெறுமதியில் 50 வீதத்தை பயனாளிகளிடமிருந்து மீள அறவிடுவதற்கும் அதற்காக 20 வருட கால அவகாசம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
லயன் வீடுகள் அமைந்துள்ள இடத்தில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வரை, வேறு இடத்தில் தற்காலிகமாக தங்குவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தோட்ட தொழிலாளர்களுக்கான வீட்டுத் திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானம்
Reviewed by Author
on
January 26, 2021
Rating:
Reviewed by Author
on
January 26, 2021
Rating:


No comments:
Post a Comment