அண்மைய செய்திகள்

recent
-

சிவபூமி மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் 03.01.2021 அன்று இடம்பெற்றது.

சிவபூமி மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் 03.01.2021 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு முப்பது மணி அளவில் எழுத்து ஊரில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது பேரவையின் புதிய தலைவராக திருக்கேதீச்சர திருத்தல பிரதம குரு சிவஸ்ரீ கருணானந்தகுருக்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

 பொதுச் செயலாளராக சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சிவரூப குருக்கள் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். நிதி செயலாளராக ஞானவைரவர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஸ்ரீஹர குருக்கள் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். 

 இதன்போது குருமார்களின் பிரச்சினைகள் மற்றும் ஆலயங்களில் ஏற்படுகின்ற நடைமுறை சிக்கல்கள் போன்றன தொடர்பாக அலசி ஆராயப்பட்டு அவைகளை ஒழுங்கு படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென தலைவரால் தெரிவிக்கப்பட்டது.


சிவபூமி மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் 03.01.2021 அன்று இடம்பெற்றது. Reviewed by Author on January 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.