யாழ். மருத்துவபீட மாணவனுக்கு கொரோனா; பிரபல உணவகம் மூடப்பட்டது
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 5ம் திகதி குறித்த மாணவன் உணவு அருந்துவதற்காக குறித்த உணவகத்திற்கு வந்திருக்கின்றார்.
இது முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் சென்றுவந்த இடங்களை உடனடியாக சுகாதார பிரிவு முற்றுகையிட்டு முடக்கிவருகின்றது. இதனடிப்படையில் குறித்த உணவகம் முடக்கப்பட்டுள்ளது.
அங்கு பணியாற்றியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை குறித்த மாணவன் ஆனைக்கோட்டையில் ஒரு இடத்திற்கும் சென்றுவந்துள்ளதாக சுகாதார பிரிவு அறிந்துள்ள நிலையில் அதனையும் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மாணவனுடன் ஒன்றாக இருந்த 4 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ். மருத்துவபீட மாணவனுக்கு கொரோனா; பிரபல உணவகம் மூடப்பட்டது
Reviewed by Author
on
January 07, 2021
Rating:

No comments:
Post a Comment