மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியை கைது
குறித்த ஆசிரியை பாடசாலையின் அதிபரிடமோ அல்லது வலய கல்விப் பணிப்பாளரிடமோ எவ்வித அனுமதியினையும் பெறாமல் குறித்த மாணவர்கள் இவ்வாறு வளவை கங்கைக்கு நீராட அழைத்துச் சென்றுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கமைய குறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
பலாங்கொடை, கல்தொட்ட படகொட பிரதேசத்தில் வளவை கங்கையில் நீராடிக் கொண்டிருந்த மாணவ மாணவிகளில் ஒரு மாணவி நிரீல் மூழ்கி நேற்று முன்தினம் (30) உயிரிழந்தார்.
பலாங்கொடை, தென்ன பிரதேசத்தை சேர்ந்த நிரோஷிகா குமாரி என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியை கைது
Reviewed by Author
on
February 01, 2021
Rating:
Reviewed by Author
on
February 01, 2021
Rating:


No comments:
Post a Comment