அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் நெல் அறுவடையில் ஈடுபட்ட ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

கிளிநொச்சியில் நெல் அறுவடையில் ஈடுபட்ட ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியிலேயே 37 வயதான சிங்காரவேல் மனோகரன் என்பவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் குறித்த நபர் நெல் அறுவடைக்காக வந்து இருந்ததாகவும் அதை முடித்து நேற்றிரவு குளிக்கச் சென்ற நிலையில் காணாமல்போயுள்ளார். 

 அதன் பின்னர் அவரை தேடும் நடவடிக்கையின்போது, அவரது உடை மற்றும் சவர்க்காரம் என்பன கிணற்றின் அருகில் இருந்ததை அவதானித்த ஏனைய நபர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் தேடல் பணிகளை தொடங்கியபோது, மேற்படி நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

கிளிநொச்சியில் நெல் அறுவடையில் ஈடுபட்ட ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் Reviewed by Author on February 15, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.