மன்னார் பேசாலையில் டெங்கு தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்- வைத்தியர் ரி.வினோதன்.
காய்ச்சல் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையின் போது குறித்த சிறுமி டெங்கு தொற்றிற்கு உள்ளாகியமை தெரிய வந்துள்ளது.
குறித்த சிறுமி தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
நீண்ட காலத்தின் பின்னர் மன்னார் மாவட்டத்தில் புதிதாக டெங்கு காய்ச்சலினால் பாதீக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
-பேசாலை பயகுதியில் உள்ள குறித்த சிறுமியின் வீடு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி மன்னார் மாவட்ட தொற்று நோய்த்தடுப்பு பிரிவினர் துரித நடவடிக்கையினை மேற்கொண்டு பேசாலையிலும், மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையிலும் புகையூட்டல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் பேசாலையில் டெங்கு தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்- வைத்தியர் ரி.வினோதன்.
Reviewed by Author
on
February 27, 2021
Rating:
Reviewed by Author
on
February 27, 2021
Rating:








No comments:
Post a Comment