மன்னார் கடலில் காணாமல் போன மீனவர்களில் ஒருவர் மாலைதீவில் உயிருடன் மீட்பு-ஒருவர் உயிரிழப்பு.
இந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி மாலைதீவு கடற்படையினரால் கண்ணன் என அழைக்கப்படும் ஏ.சிவதாஸ் (வயது-53) என்பவர் மீட்கப்பட்டார். எனினும் பாண்டியன் என அழைக்கப்படும் செல்வராசா ஜெயராம் (வயது-23) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
-உயிர் தப்பிய கண்ணன் என அழைக்கப்படும் ஏ.சிவதாஸ் (வயது-53) மற்றும் சடலமாக மீட்கப்பட்ட பாண்டியன் என அழைக்கப்படும் செல்வராசா ஜெயராம் (வயது-23) ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.
எனினும் மன்னார் கொண்ணையான் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த செபஸ்ரியான் கொட்வின் (வயது-31) என்பவர் கடலில் காணமல் போயுள்ளார்.
தற்போது உயிருடன் மீட்கப்பட்ட ஏ.சிவதாஸ் (வயது-53) என்பவர் மாலைதீவு தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதோடு, மீட்கப்பட்ட சடலம் மாலைதீவு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காணாமல் போன மன்னார் கொண்ணையான் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த செபஸ்ரியான் கொட்வின் (வயது-31) தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.இவர்கள் தொடர்பில் மாலைதீவு தமிழ் நண்பர்கள் முகநூல் ஊடாக வெளியிட்டுள்ளனர்.
மன்னார் கடலில் காணாமல் போன மீனவர்களில் ஒருவர் மாலைதீவில் உயிருடன் மீட்பு-ஒருவர் உயிரிழப்பு.
Reviewed by Author
on
February 18, 2021
Rating:

No comments:
Post a Comment