அண்மைய செய்திகள்

recent
-

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தவிசாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் புதிய தவிசாளராக இன்று (திங்கட்கிழமை) கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் கருத்து தெரிவித்த அவர், தற்போதைய மின்சார கட்டணங்கள் ஒப்பீட்டளவில் அதிகம் என சுட்டிக்காட்டினார்.

 இதேவேளை எதிர்காலத்தில் மின்சார செலவைக் குறைக்க மின்சார உற்பத்தியில் மேலும் புதுப்பிக்கத்தக்க மின்சார ஆற்றலை சேர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைய தேவையான உதவி வழங்கப்படும் எனவும் அவற்றின் மூலம் மின்சாரத் தேவையில் 70 சதவீதத்தைப் பெறுவதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் ஆணைக்குழுவின் தவிசாளர் ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு Reviewed by Author on February 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.