அண்மைய செய்திகள்

recent
-

தியாக தீபம் நினைவிடத்தில் பல்லாயிரக் கணக்கானோர் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியில் பங்கேற்றுள்ள பல்லாயிரக் கணக்கானோர் நல்லூர் பதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலுக்குச் சென்ற பேரணி, நேற்றுமுன்தினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் எடுக்கப்பட்ட கைப்பிடி மண்ணை, பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்குப் பயன்படுத்த மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

 இதேவேளை, இலக்கை அடைய பாதைகள் மாற்றப்படலாம் எனவும் மாற்று இடமொன்றில் பேரணி முடிவடையலாமென்றும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியில் அங்கம் வகிக்கும் வேலன் சுவாமிகள் தற்போது அறிவித்துள்ளார். பருத்தித்துறை நீதிமன்றம் பேரணிகள் நுழைய தடைவிதித்துள்ள நிலையில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது, நல்லூர் கோயில் ஊடாக முத்திரைச் சந்தி, அச்சுவேலியைக் கடந்து பேரணி பொலிகண்டி நோக்கிப் பயணிக்கிறது.

தியாக தீபம் நினைவிடத்தில் பல்லாயிரக் கணக்கானோர் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி! Reviewed by Author on February 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.