சுதந்திர தினத்தில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும்- மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை...
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
பெப்ரவாரி 4ஆம் திகதி சுதந்திர தினத்தன்று தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட மாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்ததனை மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு வன்மையாக கண்டிக்கின்றது.
சிங்கள மொழியைப் போன்று தமிழ் மொழியும் அரச கரும மொழியாக இருக்கின்ற படியினால் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தினைப் பாடுவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என்று மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஆகிய நாம் வலியுறுத்துகின்றோம்.
இது தமிழ் மொழியிலும் பாடப்படும் போது இனப்பிரச்சனைக்குரிய தீர்வுக்கான ஒரு வழியாக அமையும் என்று நம்புகின்றோம்.
இல்லையேல் இது இனப்பிரச்சனை தீர்வுக்கான வழியினை அடைக்கும் செயலாகவே அமையும் என்பதனை வலியுறுத்தி நிற்கின்றோம்.என மன்னார் பிரஜைகள் குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும்- மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை...
Reviewed by Author
on
February 03, 2021
Rating:
Reviewed by Author
on
February 03, 2021
Rating:



No comments:
Post a Comment