அண்மைய செய்திகள்

recent
-

காத்தான்குடி, பூநொச்சிமுனையில் அடக்கம் செய்யப்பட்ட சிசுவின் சடலம் நீதிமன்ற உத்தரவில் தோண்டியெடுப்பு..!

சந்தேகத்துக்கிடமான முறையில் அடக்கம் செய்யப்பட்ட பிறந்த சிசுவின் சடலம் நீதிமன்ற உத்திரவின் பேரில் இன்று (08) தோண்டி எடுக்கப்பட்டது. கடந்த 2 ஆம் திகதி மட்டக்களப்பு மாநகர சபை பிரதேச மான காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூநொச்சிமுனை மையவாடியில் சிசுவின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. குறித்த சிசுவின் தாய் வைத்திய பரிசோதனைக்காகச் சென்றபோது அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்படவே மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி சிசுவின் தாயை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

 அதன்படி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் குறித்த சடலத்தை தோண்டி எடுத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடவே இன்று மாலை நீதிபதி முன்னிலையில சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரிகள் உயர் பொலிஸ் அதிகாரிகள் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி உள்ளிட்ட பலர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

காத்தான்குடி, பூநொச்சிமுனையில் அடக்கம் செய்யப்பட்ட சிசுவின் சடலம் நீதிமன்ற உத்தரவில் தோண்டியெடுப்பு..! Reviewed by Author on February 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.