வடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா: நெல்லியடிச் சந்தை வியாபாரிக்கும் தொற்று!
நெல்லியடி பொதுச் சந்தையில் இன்று வியாபாரிகளிடம் எழுமாறாக மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தியதிலேயே ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 442 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் ஒன்பது பேருக்குக் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் ஐவர் மிருசுவிலில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இவர்கள் மன்னார் நானாட்டானில் உள்ள ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்களில் தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடைய ஒருவரின் குடும்பத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ். போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர் ஜா-எல பகுதிக்குச் சென்று திரும்பிய நிலையில் கொரோனதா அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறவந்த நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அச்சுவேலிச் சந்தையில் கடந்த வாரம் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட வியாபாரி ஒருவரின் மனைவிக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ள்ளார்.
வடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா: நெல்லியடிச் சந்தை வியாபாரிக்கும் தொற்று!
Reviewed by Author
on
February 19, 2021
Rating:
Reviewed by Author
on
February 19, 2021
Rating:


No comments:
Post a Comment