இளவரசர் ஹரி- மேகன் அரண்மனையின் 'அன்புக்குரியவர்களாக' இருப்பார்கள்.
அரச குடும்பத்தின் மூத்த நிலை உறுப்பினர்கள் என்ற அந்தஸ்திலிருந்து விலகிக்கொள்வதாகவும் அரச குடும்பத்தின் நிதியில் தங்கியிருக்காமல் சுயாதீனமாக இயங்கப்போவதாகவும் அவர்கள் கடந்த ஆண்டு ஜனவரியில் அறிவித்திருந்தனர்.
கடந்த மார்ச் மாதம் அரச குடும்ப பொறுப்புக்களை அதிகாரபூர்வமாக துறப்பதாக அவர்கள் அறிவித்திருந்த பின்னர் ‘மேன்மை தங்கிய அரச குடும்பத்தவர்’ (His/Her Royal Highness) என்ற கௌரவ அடைமொழியை அவர்கள் இருவரும் இழந்தனர்.
கௌரவ இராணுவப் பதவியையும் ஹரி இழந்தார்.
எனினும் இளவரசராகப் பிறந்த காரணத்தினால் ‘இளவரசர்’ என்றே ஹரி தொடர்ந்தும் அழைக்கப்படுவார்.
தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்துவரும் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர், ‘சேவை என்பது உலகளாவியது’ என்றும் முன்னரைப் போலவே தாம் சார்ந்த அமைப்புகளுக்கான ஆதரவு தொடரும் என்றும் கூறியுள்ளனர்.
அரச குடும்பத்தின் சார்பில் இராணுவம், கொமன்வெல்த் மற்றும் தொண்டு அமைப்புகளில் வகித்த பொறுப்புக்களையும் கடமைகளையும் ஹரி- மேகன் தம்பதியினர் பிரிட்டிஷ் மகாராணியாரிடம் திருப்பி ஒப்படைக்கவுள்ளனர்.
இளவரசர் ஹரி- மேகன் அரண்மனையின் 'அன்புக்குரியவர்களாக' இருப்பார்கள்.
Reviewed by Author
on
February 20, 2021
Rating:

No comments:
Post a Comment