அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நானாட்டான் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் எம். ஸ்ரீஸ்கந்த குமார் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் நானாட்டான் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (16.02.2021) இடம்பெற்றது. குறித்த அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பிரதேசவாரியாக மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.

 அதே நேரத்தில் ஆசிரியப் பற்றாக்குறை,கட்டுக்கரை குளம் அதை அண்டிய நீரேந்து பகுதிகளை விருத்தி செய்தல்,மேய்ச்சல் தரைகளை அபிவிருத்தி செய்தல், வீட்டுத்திட்டம், சட்ட விரோத மண் அகழ்வு சம்பந்தமாகவும், சட்ட விரோத மண் அகழ்வு அனுமதி பத்திரங்களை உடனடியாக ரத்து செய்தல் சம்பந்தமாகவும் முடிவான தீர்மானம் எட்டப்பட்டது. அத்துடன் சமூர்த்தி விடயம் உட்பட அது சார்ந்த பிரச்சனைகள் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டன.

 மேலும் நானாட்டன்பகுதி மக்களின் தொடர் பிரச்சினையாக உருவெடுத்துள்ள காணி சம்பந்தமான விடயங்களுடன் இணைந்த பொது அமைப்புக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது குறித்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் , திட்டமிடல் பணிப்பாளர், திணைக்கள தலைவர்கள், அரச பதவிநிலை உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு உயரதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.









மன்னார் நானாட்டான் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் Reviewed by Author on February 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.