பசறை பஸ் விபத்துக்கான காரணம்!
எவ்வாறாயினும் குறித்த பேருந்து தொடர்பில் தொழிநுட்ப ஆய்வொன்று மோட்டார் வாகன பரிசோதகர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது. மோட்டார் வாகன சடடத்தின் விதிகளின்படி எவ்வாறான சந்தர்ப்பத்திலும் விபத்தொன்றை தடுப்பது சாரதியின் பொறுப்பு மற்றும் கடமையாகும். சாரதியின் இருக்கையில் நபரொருவர் சிக்கியிருந்தார். அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
ஆரம்பகட்ட தகவலின் படி பேருந்தின் சாரதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட போதும் சாரதியின் இருக்கையில் உயிரிழந்திருந்த நபர் சாரதி அல்ல என தெரியவந்துள்ளது.
மேலும் சாரதி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். காயமடைந்தவர்கள் தற்போது பசறை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்."
குறித்த விபத்தில் உயிரிழந்த நபர்களின் சடலங்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
இதேவேளை, விபத்து இடம்பெறும் போது பேருந்து, டிப்பர் வாகனமொன்றிற்கு வீதியில் இடமளித்துள்ள நிலையில், விபத்தின் பின்னர் டிப்பர் வாகனத்தின் சாரதி அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பசறை பஸ் விபத்துக்கான காரணம்!
Reviewed by Author
on
March 20, 2021
Rating:

No comments:
Post a Comment