தன்ஸானியா நாட்டின் ஜனாதிபதி ஜோன் மகுபுலி (John Magufuli) கொரோனா தொற்றினால், தனது 61 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
வீரம் பொருந்திய தலைவரை தன்ஸானியா இழந்திருப்பதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டின் உப ஜனாதிபதி Hassan, 14 நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படும் எனவும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
அந்நாட்டு அரசியலமைப்பின்படி தன்ஸானியாவின் 5 ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஜோன் மகுபுலியின் எஞ்சிய பதவிக்காலம் நிறைவு செய்யப்படும் வரை அந்நாட்டின் தற்போதைய உப ஜனாதிபதி Hassan ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த ஜனாதிபதி John Magufuli கடந்த மாதம் 27 ஆம் திகதி மக்கள் மத்தியில் இறுதியாக தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானதைத் தொடர்ந்து அவர் கென்யாவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் Tundu Lissu தெரிவித்துள்ளார்.
தன்ஸானியா நாட்டின் ஜனாதிபதி ஜோன் மகுபுலி (John Magufuli) கொரோனா தொற்றினால், தனது 61 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
Reviewed by Author
on
March 18, 2021
Rating:

No comments:
Post a Comment