இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரங்கள் எதனையும் வழங்குவதற்கு தீர்மானிக்கவில்லை-இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர.
இந்திய மீனவர்களின் இலுவைப்படகுகள் எமது கடற்பரப்பில் அதிக அளவில் நுழைகின்றது.
அதே போன்று எமது மீனவர்களும் இந்திய எல்லைக்குள் நுழைகின்றனர்.இப்பிரச்சினையை கையால்வது குறித்து நாங்கள் கலந்துரையாடி உள்ளோம்.
அத்துடன் இந்திய இலுவைப்படகுகள் பாரிய அளவில் எமது கடல் எல்லைக்குள் நுழைந்து தடை செய்யப்பட்ட இலுவைப்படகுகளை பயணிபடுத்தி சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இதற்கு நாங்கள் பாரிய எதிர்ப்பினையும் வெளிப்படுத்தி உள்ளோம்.இதற்கு அமைவாக எமது கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபடுகின்றவர்களை கைது செய்யுமாறு கடற்படையினருக்கும், கடலோர பாதுகாப்பு பிரிவினருக்கும் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை விடுத்துள்ளோம்.
அரசாங்கம் என்ற ரீதியிலோ அல்லது அமைச்சு என்ற ரீதியிலோ அனுமதிப்பத்திரங்கள் எதனையும் வழங்குவதற்கு நாங்கள் தீர்மானிக்கவில்லை என்பதனை தெழிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.
.
.
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரங்கள் எதனையும் வழங்குவதற்கு தீர்மானிக்கவில்லை-இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர.
Reviewed by Author
on
March 30, 2021
Rating:

No comments:
Post a Comment