கிளிநொச்சி ஏ-9 வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்
ஏ-9 வீதி வழியாக பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியால் நடந்து சென்றவருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் உயிரிழந்தவர் கிளிநொச்சி விவேகாநந்தாநகர் பகுதியை சேர்ந்த செல்லப்பா சந்திரகுமார் என்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அவரது சடலம் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை காயமடைந்த மற்றைய நபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த பொலிஸார் விபத்து தொடர்பான மேலாதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
கிளிநொச்சி ஏ-9 வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்
Reviewed by Author
on
March 30, 2021
Rating:

No comments:
Post a Comment