இரணை தீவு மக்களின் எதிர்பையும் மீறி கொரோனா தொற்றில் மரணிப்பவர்களை புதைக்க தோண்டப்பட்ட குழிகள்-அச்சத்தில் இரணை தீவு மக்கள்.
எனவே அரசாங்கம் இம் முடிவை மீள் பரிசீலனை செய்து மக்கள் நடமாட்டம் அற்ற தீவுகளை தெரிவு செய்து அவ்வாறன பகுதிகளில் சடலங்களை அடக்கம் செய்ய முனைய வேண்டும் எனவும், பல போரட்டங்கள் மத்தியில் மீள் குடியேறி வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும் இரணை தீவு மக்கள் வசிக்கும் பகுதிகளில் இவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதோடு, இந்த கோரிக்கையை வெளிப்படுத்துவதற்கு நாளைய தினம் புதன் கிழமை காலை 9 மணியளவில் இரனை தீவில் வசிக்கும் மக்கள் அனைவரும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் இரணை தீவு பங்குதந்தை அருட்தந்தை மடுத்தீன் பத்திநாதர் அடிகளார் தெரிவித்துள்ளார்.
இதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் கக்கட தீவு பகுதியிலும் குழிகள் தோண்டப்பட்ட நிலையில் நீர் வெளி வந்த காரணத்தினால் அப்பகுதியில் குழிகள் தோண்டும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரணை தீவு மக்களின் எதிர்பையும் மீறி கொரோனா தொற்றில் மரணிப்பவர்களை புதைக்க தோண்டப்பட்ட குழிகள்-அச்சத்தில் இரணை தீவு மக்கள்.
Reviewed by Author
on
March 02, 2021
Rating:
Reviewed by Author
on
March 02, 2021
Rating:





No comments:
Post a Comment