அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்றால் இறந்தவர்களில் உடல்களை இரணை தீவில் புதைப்பதற்கு எதிர்ப்பு.-நாளை போராட்டத்திற்கு தயாராகும் இரணை தீவு மக்கள்

முஸ்லீம் சகோதரர்களால் பல்வேறு பட்ட பகுதிகள் முன்னொழியப்பட்ட போதிலும் அவற்றை தவித்து யுத்ததால் இடம் பெயர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் 2017 ஆம் ஆண்டு பல கட்ட போராட்டங்களின் பின்னர் மீள் குடியேறிய எமது இரனை தீவு பகுதிகளில் உடல்களை அடக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் கவலை அழிப்பதுடன் தங்களுக்கு மகிழ்சி இன்மையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

 அதே நேரத்தில் இரனைதீவு பகுதியானது நீரேந்து பிரதேசமாக காணப்படுவதனால் கொரோனா தொற்றுள்ள உடல்களை புதைப்பதனால் நீர் ஊடாக தொற்று பரவ வாய்புள்ளதாகவும் அண்மைக் காலமாகவே இரணை தீவு மக்கள் குடியேறி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் இம் முடிவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதிலை எனவும் தெரிவித்துள்ளார். 

 தற்போது 165 குடும்பங்கள் அட்டை பண்ணைகளை அமைத்து அங்கு வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பும் கேள்விகுறியாகியுள்ளது. எனவே மக்கள் அனைவரும் இணைந்து நாளைய தினம் புதன் கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதுடன் யாழ்பாண மனித உரிமை அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவுத்துள்ளார்.
               






கொரோனா தொற்றால் இறந்தவர்களில் உடல்களை இரணை தீவில் புதைப்பதற்கு எதிர்ப்பு.-நாளை போராட்டத்திற்கு தயாராகும் இரணை தீவு மக்கள் Reviewed by Author on March 02, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.