கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை விரைவில் வெளியிடவும் – சர்வதேச மன்னிப்புச்சபை
முஸ்லிம் சமூகத்தினரின் மத ரீதியான நம்பிக்கையையும் உரிமையையும் மறுக்கும் வகையில் கட்டாயத் தகனத்தை நடைமுறைப்படுத்துவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.
எனவே சிறுபான்மையினமான முஸ்லிம் சமூகத்தினரின் மத ரீதியான உரிமையைப் புறக்கணிக்கின்றதும் விஞ்ஞான ரீதியில் எவ்விதத்திலும் நிரூபிக்கப்படாததுமான ஒரு தீர்மானம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளமை உண்மையில் வரவேற்கத்தக்கதாகும்.
கட்டாயத்தகனம் தொடர்பான தீர்மானத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், முஸ்லிம் சமூகத்தின் உறுப்பினர்களுக்குத் தற்போதைய தீர்மானம் ஆறுதலை அளித்திருக்கும்.
எனினும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டல்களை வெளியிடுவதில் தாமதம் காண்பிக்கப்பட்டுவரும் நிலையில், அதனை உடனடியாக வெளியிட வேண்டும்.
சிறுபான்மையின முஸ்லிம்களைப் புறந்தள்ளும் வகையிலான எவ்வித நடவடிக்கைகளும் இனியும் மேற்கொள்ளப்படக்கூடாது என வலியுறுத்துகின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை விரைவில் வெளியிடவும் – சர்வதேச மன்னிப்புச்சபை
Reviewed by Author
on
March 02, 2021
Rating:
Reviewed by Author
on
March 02, 2021
Rating:


No comments:
Post a Comment