வடக்கில் மேலும் 12 பேருக்கு கொரோனா – ஆ.கேதீஸ்வரன்
யாழ்ப்பாணத்தில் சங்கானை மருத்துவ அதிகாரி பிரிவில் மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மூன்று பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பிய நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் வெளிநாட்டு நுழைவுவிசைவுக்கு (விசா) விண்ணப்பித்த மாணவன்.
மற்றையவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர்.
மல்லாவி மீன் சந்தையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
திருக்கேதீஸ்வரம் ஆலய மஹா சிவராத்திரி திருவிழாவுக்கு கடை அமைத்தவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் வீதி சீரமைப்புப் பணியில் ஈடுபடும் பணியாளர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
வடக்கில் மேலும் 12 பேருக்கு கொரோனா – ஆ.கேதீஸ்வரன்
Reviewed by Author
on
March 13, 2021
Rating:
Reviewed by Author
on
March 13, 2021
Rating:


No comments:
Post a Comment