மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளுடன் சிறப்பாக இடம் பெற்று வரும் சிவராத்திரி நிகழ்வு.
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து செல்லும் நிலையில் சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக மஹா சிவராத்திரி நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது.
-பொலிஸார்,இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புகளுக்கு மத்தியில் கடுமையான சுகாதார நடை முறைகளுடன் சிவராத்திரி நிகழ்வுகள் இடம் பெற்று வருவதோடு, ஆறு ஜாம பூஜைகளும் இடம் பெற்று வருகின்றது.
அதே நேரத்தில் இராணுவம் பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையினரின் கண்கானிப்பின் கீழ் மஹா சிவராத்திரி பூஜைகள் இடம் பெற்று வருகின்றது.
பாலாவி தீர்த்த கரையில் நீராடுவதும் தீர்த்தம் எடுத்து செல்வதும் பாதுகாப்பு காரணங்களால் தடை செய்யப்பட்டுள்ளது.
சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீஸ்வர திருப்பணி சபையின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட இந்து கலாச்சார நிகழ்வுகள் அறநெறி சொற்பொழிவு நிகழ்வுகளும் இடம் பெற்று வருகின்றது.
-சுகாதார துறையினர் கொரோனா தொடர்பில் சுகாதார நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
.
.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளுடன் சிறப்பாக இடம் பெற்று வரும் சிவராத்திரி நிகழ்வு.
Reviewed by Author
on
March 12, 2021
Rating:
Reviewed by Author
on
March 12, 2021
Rating:

















No comments:
Post a Comment