மன்னார் எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீர் தீ விபத்து-பொருட்கள் எரிந்து சேதம்.
வீட்டில் வசிப்போர் வாகனம் ஒன்று வைத்துள்ள நிலையில் அந்த வாகனத்திற்கான டயர் மற்றும் காற்று அடிக்கும் இயந்திரம் உள்ளிட்ட ஏனைய பொருட்களும் வீட்டின் ஓர் அறையில் இருந்த நிலையில் தீ பரவல் காரணமாக முன் பகுதி மற்றும் கூரை பகுதி பாரிய சேதங்கள் ஏற்பட்டு தீக்கிரையாகி உள்ளது.
குறித்த சம்பவம் எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்று அறிய முடியாத நிலையில் மன்னார் பொலிஸாரிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார் நகரப் பகுதியில் தீயணைப்பு படை பிரிவு இல்லாமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதும் இது வரை குறித்த படைப்பிரிவும், தீயணைப்பு வாகனமும் மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீர் தீ விபத்து-பொருட்கள் எரிந்து சேதம்.
Reviewed by Author
on
March 22, 2021
Rating:

No comments:
Post a Comment