தலைமன்னாரில் புகையிரத விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் புகையிரத கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை.
சம்பவம் இடம் பெற்ற போது குறித்த தனியார் பேரூந்தில் 30 பேர் பயணித்துள்ளனர்.விபத்தில் காயமடைந்த மாணவர்கள்,பயணிகள் உற்பட 25 பேர் உடனடியாக அம்புலான்ஸ் வண்டி மூலம் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
இதன் போது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பலத்த காணமடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.செந்தூர்பதிராஜா தெரிவித்தார்.
இதே வேளை குறித்த விபத்து இடம் பெற்ற சத்தர்ப்பத்தில் புகையிரத கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும், புகையிரத கடவைக்கான தடை குறித்த நேரத்தில் இடப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விபத்திற்குள்ளான பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தலைமன்னாரில் புகையிரத விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் புகையிரத கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை.
Reviewed by Author
on
March 17, 2021
Rating:

No comments:
Post a Comment