யாழ். வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் இருவர், தாதியர்கள் மூவர் உட்பட நிரந்தர பணியாளர்கள் 9 பேரும் மருத்துவ பீட மாணவர்கள் இருவர் தாதிய மாணவர் ஒருவரும் சுத்திகரிப்பு பணியாளர் ஒருவரும் என 13 பேர் இன்று கோரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உயர்மட்டக் கூட்டம் இன்றிரவு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மேற்படி வலியுறுத்தினார்.
போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் சுமுகமாக முன்னெடுக்கப்படும்.
கிளினிக் பெறும் நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நோயாளர்களை பார்வையிட வருவோர் தவிர்க்கவேண்டும்.
போதனா வைத்தியசாலைக்குள் தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ். வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
Reviewed by Author
on
March 27, 2021
Rating:
Reviewed by Author
on
March 27, 2021
Rating:


No comments:
Post a Comment