ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் மாவட்ட அமைப்பாளர்கிடம் அவசர கோரிக்கை முன் வைப்பு.
மேலும் இது தொடர்பான அவசரக் கடிதங்களும் தொகுதி அமைப்பாளர்களுக்கு கட்சித் தலைமை யகத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ கொத்தா வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் எதிர் வரும் ஜீன் மாதப் பகுதியில் நாடளாவிய ரீதியில் ஒரே சமயத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் கட்சி கிளைகளின் புனரமைப்பு பணிகளை விரைவில் பூர்த்தி செய்யுமாறும், மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுமாறும், பொருத்தமான வேட்பாளர்களை தயார் படுத்துமாறும், ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு கட்சித் தலைமையகத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளில் இலங்கை மக்கள் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வகிப்பாகம் குறித்து தற்போது பெரிதாக சிந்திக்க தலைப்பட்டுள்ளதாகவும் கடந்த பொதுத் தேர்தல் மூலம் இலங்கை பாராளுமன்றதிற்கு ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகள் இடம் பெறாத துர்பாக்கிய நிலையில் தற்போது அதன் பாரதூரத் தன்மையையும் அவசியத்தையும் அனைவரும் உணர்ந்துள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் வேலைத்திட்டங்களைக் கிராம மட்டத்தில் இருந்து முன்னெடுக்குமாறும் அமைப்பாளர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்க ப்படுகிறது.
இதேவேளை எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் தமது சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை காலதாமதமின்றிக் கட்சி தலைமையகத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தமது விண்ணப்பங்களை பொது செயலாளர், ஐக்கிய தேசிய கட்சி,இல.400. பிட்ட கோட்டை, கோட்டை.எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் இது தொடர்பில் 0112878123 மற்றும் 0777238659 ஆகிய தொலை பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் மாவட்ட அமைப்பாளர்கிடம் அவசர கோரிக்கை முன் வைப்பு.
Reviewed by Author
on
March 22, 2021
Rating:
Reviewed by Author
on
March 22, 2021
Rating:


No comments:
Post a Comment