அண்மைய செய்திகள்

recent
-

சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கிய கப்பல்: அடேயப்பா இவ்வளவு நஷ்டமா?

சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கிய கப்பல்: அடேயப்பா இவ்வளவு நஷ்டமா? சூயஸ் கால்வாயில் தரை தட்டி நிற்கும் பிரம்மாண்ட சரக்கு கப்பலால் உலகப் பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதை மீட்க தொடர்ந்து கால தாமதமாகி வருவதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

 சூயஸ் கால்வாயில் தரை தட்டி நிற்கும் பிரம்மாண்ட சரக்கு கப்பலால் உலகப் பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதை மீட்க தொடர்ந்து கால தாமதமாகி வருவதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதையில் ஒன்று எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய். மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் இந்த கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. 

163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்ட இந்த கால்வாய் 1869ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்பட்டது. இந்தக் கால்வாய் வழியாக உலக வா்த்தகத்தின் 12 சதவீதம் நடைபெற்று வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக விளங்கி வருகிறது . ஆண்டு ஒன்றுக்கு சுமார் 15,000 கப்பல்கள் இந்த சூயஸ் கால்வாயை கடந்து செல்கின்றன.

 இதனால் எப்போதும் இந்தப் பகுதி பரபரப்பாக இருக்கும். இந்நிலையில் இந்த கால்வாயில் பிரம்மாண்டமான சரக்குக் கப்பலான ‘எவர் கிரீன்’ குறுக்கே திரும்பி சிக்கிக் கொண்டது. இதனால் அந்த கால்வாயை கடக்க முடியாமல் நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் நிற்கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த கடல்வழிப் பாதையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதன் காரணமாக மணிக்கு 40 கோடி டாலா் இழப்பு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதாவது மணிக்கு 2900 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. பிரம்மாண்ட எவர் கிரீன் கப்பலின் நீளம் மட்டும் சுமார் 400 மீட்டர். அகலம் 59 மீட்டர். இந்த கப்பல் சீனாவிலிருந்து நூற்றுக்கணக்கான கன்டெய்னர்களுடன் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நோக்கி சென்று கொண்டிருந்தது. மார்ச் 22ஆம் தேதி எகிப்திலுள்ள சூயஸ் கால்வாயை எவர் கிரீன் வந்தடைந்தது. மார்ச் 23ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் பயணத்தை தொடங்கிய போது வீசிய சூறாவளிக் காற்றால் எவர் கிரீன் கப்பல் கால்வாயின் குறுக்காக மணலில் மாட்டிக் கொண்டது. 

குறுக்கே சிக்கிக் கொண்ட ‘எவர் கிரீன்’ கப்பலின் உரிமையாளரான ஜப்பானின் ஷோயேய் கிசேன், சா்வதேச வா்த்தகத்துக்கு இழப்பை ஏற்படுத்திய இந்த விபத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார். 400 மீட்டா் நீளமும் 2 லட்சம் டன் எடையும் கொண்ட ‘எவர் கிரீன்’ கப்பலை மணலில் இருந்து வெளியே கொண்டு வர முடியாமல் மீட்புக் குழுவினா் திணறி வருகின்றனா். இதை மீட்க வாரக் கணக்காகும் என்கிறார்கள். 

இதனால் உலகப் பொருளாதாரமும் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளது குறுக்கே சிக்கிக் கொண்ட ‘எவர் கிரீன்’ கப்பலின் உரிமையாளரான ஜப்பானின் ஷோயேய் கிசேன், சா்வதேச வா்த்தகத்துக்கு இழப்பை ஏற்படுத்திய இந்த விபத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார். 400 மீட்டா் நீளமும் 2 லட்சம் டன் எடையும் கொண்ட ‘எவர் கிரீன்’ கப்பலை மணலில் இருந்து வெளியே கொண்டு வர முடியாமல் மீட்புக் குழுவினா் திணறி வருகின்றனா். இதை மீட்க வாரக் கணக்காகும் என்கிறார்கள். இதனால் உலகப் பொருளாதாரமும் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளது



சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கிய கப்பல்: அடேயப்பா இவ்வளவு நஷ்டமா? Reviewed by Author on March 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.