கொழும்புக்கு சென்ற இளம் கணவனை காணவில்லை : மீட்டுத்தருமாறு மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை!!
இந்நிலையில் அவர் அங்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு- குருந்துவத்த பொலிஸில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தன்னிடம் தெரிவித்ததாக மனைவி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்ட தனது கணவரை வைத்தியசாலையிலோ அல்லது, சேருநுவர பொலிஸிற்கோ , தனக்கோ அறிவிக்காமல் அவரை குருந்துவத்த பொலிஸார் திருப்பி அனுப்பியது கவலையளிப்பதாகவும் கூறியுள்ளார்.
தனது கணவர் இதற்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல எனவும், 13ஆம் திகதி காலை தன்னிடம் நன்றாகவே பேசியதாகவும் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
தனது இரண்டு பிள்ளைகளும் அப்பா எப்போது வருவார் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.எப்படியாவது எனது கணவரை மீட்டுத்தர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்
.
.
கொழும்புக்கு சென்ற இளம் கணவனை காணவில்லை : மீட்டுத்தருமாறு மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை!!
Reviewed by Author
on
March 18, 2021
Rating:

No comments:
Post a Comment