மன்னாரில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மின்சார சபை பணியாளர் ஒருவர் பதவி உயர்விற்கான பரீட்சையை சுய தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் எழுதினார்.
இந்த நிலையில் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் குறித்த நபரின் நிலையை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் அவர்களின் கனத்திற்கு கொண்டு வந்தார்.
-துரித முயற்சிகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் மின்சார சபை உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
-இந்த நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த பணியாளர் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள மோட்டக்கடை பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்ட இடத்திலேயே பரீட்சைக்கு தோற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதற்கு அமைவாக யாழ்ப்பாணத்தில் இருந்து வினாத்தால் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உரிய அதிகாரிகளின் மேற்பார்வையில், சுகாதார நடை முறைகளுடன் குறித்த மின்சார சபை பணியாளர் பரீட்சை எழுதி உள்ளார்.
மன்னாரில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மின்சார சபை பணியாளர் ஒருவர் பதவி உயர்விற்கான பரீட்சையை சுய தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் எழுதினார்.
Reviewed by Author
on
April 24, 2021
Rating:
Reviewed by Author
on
April 24, 2021
Rating:




No comments:
Post a Comment